க வசந்தமணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : க வசந்தமணி |
இடம் | : மொடையூர், செஞ்சி |
பிறந்த தேதி | : 30-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 308 |
புள்ளி | : 64 |
நான் எழுதிய கவிதைகளை முதல் முதலில் ஒரு புத்தகமாக தொகுத்து தாகம் என்னும் தலைப்பில் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்போகிறேன்.
உனை நினைத்து
உருகுகையில்
என்
கண்ணீரில்
மிதக்கும்
உன்முகம்
கண்ணை விட்டுப்
பிரியாமலிருக்க
மையிட்டுக்
கொள்கிறேன்
அகிலா
புண்ணிய பூமியான
பாலஸ்தினத்திற்கு
ஆங்கிலேயர் ஒருவர்
சுற்றி பார்க்க
சென்றார்
கலிலேயாக் கடலில்
படகில் செல்ல விரும்பி
படகோட்டியிடம்
எவ்வளவு கட்டணம்?
என்று கேட்டார்
படகோட்டி
பத்து ஷில்லிங் என்றார்,
ஆங்கிலேயரோ
எங்க ஊரில் வெறும்
ஏழு பென்ஸ் என்றார்
அதற்கு படகோட்டி
அது உங்களூரையா,
இது கலிலேயாக் கடல்
இயேசு கிறிஸ்து நடந்த
கடலய்யா என்றார்
ஆங்கிலேயர் அதற்கு
அநியாய படகு கட்டணத்தால்
அந்த ஏழை இயேசு
எப்படி கொடுப்பார்?
அதனால் தான் கடல்மேல்
நடந்தே சென்ருக்கிறார்.
ஒரு முத்தம் கொடுக்க
இவ்வளவு வெட்கமா என
சிரித்தாள் வெண்ணிலா
நான் வேண்டுமானால்
கண்களை மூடிக்கொள்ளவா
என்றாள் மின்மினி
சுற்றி வேறுயாரவது பார்க்கலாம்
என்ற சந்தேகத்தில் பார்வையை
செலுத்தினேன் அல்லியின் மீதும்
அடக்கத்தை என்ன விலையென்று
கேட்கும் அழகியாயிற்றே அவள்
அப்படியே மணத்தால் என்னை
திருட முயற்சிக்கையில்தான்
தெரிந்து கொண்டேன் மல்லிகையும்
அருகில்தான் ஒளிந்திருக்கிறாள் என்று
எல்லோரும் என்னையே உற்றுப்பார்த்தபடி
இருக்க எனக்கு மட்டும் ஏன்
கூடிக்கொண்டே இருக்கிறது வெட்கம்
என்ற சுயசோதனையில் இருந்து
மெதுவாய் வெளிவந்து தப்பிக்கையில்தான்
என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டத
தன் கணவன்
வேர்வை நாற்றத்தை
முகர்ந்து தன் உடலோடு
போர்த்தி ரசித்த மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!
அவன் சொன்ன
ஆசை வார்த்தைகளை
தனிமையில் பேசி ரசித்த
மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!
வாசலில் விழி வைத்து
கண்கள் அவனை
கற்பனையில்
தீட்டிக்கொண்டிருக்கும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!
கணவன் உண்ணும் போது
அதில் உணவு மீந்து
போகாதா என
பரிமாறும்போது
நினைக்கும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!
ஆசை வார்த்தைகள்
கணவன் பேச
எதிர்பார்த்தே எக்கத்தில்
புதையும் மனைவிமார்கள்
எத்தனை எத்தனை!
வயிறு நிறைய
உண்டாலும்
கணவன் ஊட்டும்
ஒரு வாய்
சோற்றில் தானே
மனம் நிறையும் எனும்
ஆசையில் மனைவிமார்கள்
காதலி
நான்
கவிதை எழுதும் போதெல்லாம்
நீ
தந்தையாகவும்
நான்
தாயாகவும்
மாறுகிறோம்
கவிதை உருவாக்குபவன்
நான் தாய்!
அதற்கு காரணமாக இருப்பவள்
நீ தந்தை
ஏதோதோ பேசுகிறாய்
ஏதோதோ செய்கிறாய்
எப்படி எப்படியோ சிரிக்கிறாய்
அப்படி அப்படி முறைக்கிறாய்
வேக வேகமாய் அடிக்கிறாய்
கெஞ்ச கெஞ்ச கொஞ்சுகிறாய்
எப்போ இதெல்லாம்
எனக்கு நிகழ போகிறது
மனம் காதலியில்லாமல்
தவிக்கிறது....
தோன்றும் போது எழுதுவது
கவிதை
உன்னை பார்க்கும்
போதெல்லாம்
என் பேனா
நோட்டை தேடுகிறது.
அதற்கு பெயரென்ன....
தூக்கம் வரவில்லை
என்னவள் என் மீது
துவண்டு சாய்கிறாள்
தூக்கம் ஒரு காரணம்
நீ உன்னை தனிமை படுத்திக் கொள்ளும் போது.
நானும் தனிமை படுத்தப் படுகிறேன்
என்பதை ஏன் நீ மறந்து விட்டாய்...!
மேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு !
ஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்!!
உறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்!
உணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்!!
சோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்!
சேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்!!
ஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்!
ஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு!!
@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@
...கவியாழினிசரண்யா ...
மதுவில் ஏதடி மயக்கம்
உன் மை விழி கண்ட பிறகு !
மதம் பிடித்த யானையாய் நான்
நீ என் மனம் கவரும் வரை !
மறுமொழி மறந்தேன் உன்
இரு விழி வார்த்தையில் !
வற்றும்
நதி மீன் ஆகிறேன் உன்
கடை விழி காணா நாட்களில் !
இடை மரிக்க மனமில்லை ஆதலால்
வழிமொழி போதும் என் காதலை !
நீ
பள்ளிக்கு
வராத நாட்கள் எல்லாம்...
என் வருகைப்பதிவில்
விடுமுறை தான் ....